Pookara Lyrics & Tabs by Shankar Mahadevan & Vasundra Das
Pookara
guitar chords lyrics
ஆகுல்சே… குல்சே குல்சே… கும்சே… கும்சே…
பெபூக்காரா
ஆபூ… பூ… பூ…
பெபூக்காரா
ஆபூ… பூ… பூ…
பெஎன் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்வி விடு
ஆம்… கூம்…
பெஎண்ணிக்கை
ஆபூ… பூ… பூ…
பெகுறையாமல்
ஆபூ… பூ… பூ…
பெஎல்லாப் பூவையும் ஒருமுறை கிள்ளிவிடு
பூங்கொடிக்குக் கட்டுப்பட்டு பட்டுக்கட்டும் மொட்டக்கூட்டம்
பூப்பதென்ன ஒருமுறை தான்!
பூப்படைந்த பின்னும்கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள்
பூங்கொடிக்குக் கட்டுப்பட்டு பட்டுக்கட்டும் மொட்டக்கூட்டம்
பூப்பதென்ன ஒருமுறை தான்!
பூப்படைந்த பின்னும்கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள்
பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும்தான் (பூக்காரி…)
பெமின்னல் பாம்பைக் கையில் சுற்றும் உள்ளம் கொண்டவள் நான்
கிளி கொஞ்சம் புலி கொஞ்சம் கலவை நான்
காதலுக்கேது சன்டே… மன்டே
கணக்குப் பண்ணுங்க இன்றே இன்றே
மேட் ஃபார் ஈச்சதர் என்றே என்றே
மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே
ஆஎட்டுத்திசையை மாற்றிப் போகும் கெட்டிக்காரன் நான்
சூரியனில் கூடுகட்டும் பறவை நான்
நீ ஒற்றை முடியால் தேரை இழப்பாய்
கட்டை விரல் அசைவில் காரியம் முடிப்பாய்
இளமையினால் இமயத்தை உடைப்பாய்
வளைவுகளாலே வானத்தை வளைப்பாய்
பெபதினெட்டு வருடம் காய்ந்துள்ள
நிலத்தில் பருவமே மழை பொழிக
ஆஓ… பன்னிரெண்ட மாதம் இரவுகள் செய்து
பள்ளியறைச் சுகம் பெறுக (பூக்காரா)
ஆவெண்பா கேட்டால் பெண்பா சொல்லும்
முக்கால் கவிஞன் நான்
சன்யாசி சம்சாரி ரெண்டும் நான் (நீ ஒற்றை)
பெவயசுப் பயல் மையல் கொள்ளும் வயசுப்புயலும் நான்
முனிவர்களும் துறவாத முத்தம் நான் (காதலு)
ஆகாட்டுக்குள்ளே விழுந்த மழைத்துளிபோல
உனக்குள்ளே தொலைத்துவிட்டேன்
பெகாற்றினில் கலந்த ராகத்தைப் போல
உனக்குள்ளே கரைந்துவிட்டேன்
ஆபூக்காரி
குழுபூ……… பூ……
ஆஏய் பூக்காரி
குழுபூ……… பூ……
ஆஉன் பூக்கள் மொத்தம் எத்தைனை தெரியவில்லை
ஆபூக்கூடை
குழுபூ… பூ…
ஆஉன் பூக்கள் எண்ணிச் சொல்வது சுலபமில்லை
ஆபூவையரின் தேகத்துக்குள் பூவில்லாத பாகம் ஏது?
சொன்னவர்கள் கண்டதில்லையே!
காலை நேரப் பூக்கள் வேறு
மாலை நேரப் பூக்கள் வேறு
கண்டவர்கள் சொன்னதில்லையே!